str

நடிகர் சிம்பு பல பிரபலங்களுடன் இணைந்து நடித்த படம் ‘செக்கச் சிவந்த வானம்’. இந்த படத்தின் வெற்றியை அடுத்து, சுந்தர்.சி யின் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்னர் இந்த படத்திற்கு வந்தா ராஜாவாதான் வருவேன் என்று வைக்கப்பட்டது. இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 29ஆம் தேதியே இந்த படத்தின் டீசர் வெளியாகும் என்று சொல்லப்பட்ட நிலையில், சமூக வலைதளத்தில் வெளியாகாமல் இருந்தது. ஆனால், சில திரையரங்குகளில் மட்டும் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் எந்தவித அறிவிப்பும் இன்றி இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படம் தெலுங்கு படமான ‘அத்தாரிண்டிக்கி தாரேதி’யின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. டீசரின் முதல் வசனமே எம்ஜியார் பேசும் வசனம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisment

{"preview_thumbnail":"/s3/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/89du5psDhJM.jpg?itok=UarZ5iw-","video_url":" Video (Responsive, autoplaying)."]}

Advertisment