Advertisment

சாமானியனும் ஹீரோ ஆகலாம்... இயக்குநர் சுசி கணேசின் புதிய முயற்சி

vanjam theera thaayada movie hero selection

'கந்தசாமி', 'திருட்டு பயலே' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர்சுசி கணேசன் தற்போது 'வஞ்சம்தீர்த்தாயடா' என்ற படத்தைஇயக்கவுள்ளார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்க, மஞ்சூரி கணேஷ் தயாரிக்கவுள்ளார். இரண்டு கதாநாயகர்கள் கொண்ட கதையாக உருவாகவுள்ள இப்படத்திற்கான நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.மேலும் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் வருங்கால சூப்பர் ஸ்டார்-2022 என்ற நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறும் போட்டியாளர் வஞ்சம் தீர்த்தாயடா படத்தில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடிக்கவுள்ளார். மற்றொரு கதாநாயகனாக பிரபல நடிகர் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Advertisment

இது குறித்துஇயக்குநர்சுசி கணேசன் கூறுகையில், "பலருக்கும் நடிக்கும் ஆசை திறமை இருந்தும் பலர் பல்வேறு காரணங்களால் நடிப்பு கனவை ஒத்திவைத்து, வேறு பாதையில் பயணப்பட்டு இருப்பார்கள் . தோற்றமும், முக பாவனையும் முக்கியான இந்தக் கதாநாயகன் தேடலுக்கு வயது வரம்பை உயர்த்தியிருக்கிறேன். சூப்பர் ஸ்டார் ஆகும் தகுதியுள்ள ஓர் அற்புதமான நடிகரைக் கண்டெடுப்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம்" எனக் கூறியுள்ளார்.

Advertisment

susi ganesan Vanjam theerththaayadaa
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe