Advertisment

"கடின உழைப்பும் விடாமுயற்சியும் ஒருபோதும் தோல்வியடையாது" - தம்பிக்கு வனிதா வாழ்த்து

vanitha wishes arun vijay yaanai movie

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'யானை'. இப்படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்க பிரகாஷ் ராஜ், ராதிகா, யோகிபாபு, இமான் அண்ணாச்சி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம்இன்று திரையரங்குகளில் வெளியானது. கிராமத்து கதையை மையமாக வைத்து ஹரிக்கே உரித்தான ஆக்ஷன் பாணியில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில் இப்படத்திற்கு அருண் விஜய்யின் அக்கா வனிதா விஜயகுமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “கடின உழைப்பும், விடா முயற்சியும் ஒருபோதும் தோல்வியடையாது எனக் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். பல வருடங்களாக அருண் விஜய்யும், அவரது அக்கா வனிதாவுக்கும் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்த நிலையில் தற்போது வனிதா வாழ்த்து தெரிவித்துள்ளது பலரையும் வியப்படையவைத்துள்ளது. இதில் சிலர் படத்தை இயக்கிய ஹரி, வனிதாவின்தங்கைகணவர் என்பதால் அவர் வாழ்த்து தெரிவித்திருக்கலாம் எனவும் கூறி வருகின்றனர்.

Advertisment

Yaanai vanitha vijayakumar arun vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe