vanitha

Advertisment

பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் சென்ற வனிதா ஏற்படுத்திய குழப்பத்தால் மதுமிதா மற்றும் அபிராமி ஆகியோர் நேற்று வெளியேற்றப்பட்டார்கள். இதனால் வனிதா மேல் கடும் கோபத்தில் இருக்கும் ரசிகர்கள் அவர் எப்போது பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என ஆவலாக காத்திருக்கின்றனர். இதற்கிடையே வனிதா ரி என்ட்ரி கொடுத்த பிறகு தான் பிக் பாஸ் நிகழ்ச்சி சூடு பிடித்துள்ளது. இதனால் அவரை தொடர்ந்து போட்டியாளராகவே வைத்திருக்க பிக் பாஸ் தரப்பு முடிவு செய்திருப்பதாக புதிய தகவல் ஒன்று கசிந்துள்ளது. இந்த புதிய தகவலால் ரசிகர்கள் சற்று கலக்கத்தில் உள்ளனர்.