Advertisment

“நான் இதுவரை எதையும் இழக்கவில்லை” - வனிதா விஜயகுமார் உருக்கம்! 

vanitha vijayakumar

Advertisment

வனிதாவிஜயகுமார், பீட்டர் பால் என்பவரை கடந்த ஜூன் 27ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். அதைத் தொடர்ந்து பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலன், தன்னிடம் முறையாக விவாகரத்துப் பெறாமல் வனிதாவை தனது கணவர் திருமணம் செய்து கொண்டதாக காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

பின்னர், இது பெரும் சர்ச்சையாக உருவானது. பீட்டர் பாலின் முதல் மனைவிக்கு ஆதரவாக கஸ்தூரி, லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், தயாரிப்பாளர் ரவீந்திரன் உள்ளிட்டோர் வனிதாவை விமர்சித்தனர். விமர்சித்த அனைவரையும் வாயடைக்கும் வகையில், ஒவ்வொருவருடனும்சண்டையிட்டுப் பதிலளித்து வந்தார் வனிதார்.

சமீபத்தில் தனது 40 -ஆவது பிறந்தநாளைக் கொண்டாடகுடும்பத்துடன் கோவா சென்றிருந்தார் வனிதா. அங்கு அவருக்கும் பீட்டர் பாலுக்கும் ஏற்பட்ட பிரச்சனையில், பீட்டர் பாலை வீட்டை விட்டு வெளியேற்றியதாக தகவல் வெளியானது.

Advertisment

தற்போது இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நான் எதையும் மறைக்கவில்லை. நான் என் குழந்தைகளுக்கும், வேலைக்கும் எந்த தொந்தரவும் இல்லாமல், பிரச்னைகளைத் திடமாக நின்று எதிர்கொண்டு வருகிறேன். என் வாழ்க்கையில் பிரச்சனைகள் ஒன்றும் புதிதல்ல. வாழ்க்கை ஒரு பாடம். அதில் நான் கற்றுக்கொண்டே இருக்கிறேன்.. நான் வேண்டிக்கொள்வது என்னவென்றால், பொய்ச் செய்திகளைப் படித்துவிட்டு ஏதாவது ஒரு கதையைக் கட்டிக் கொண்டிருக்காதீர்கள். நான் எதையும் தவறாகச் செய்துவிடவில்லை. அன்பு தேவைப்பட்ட ஒருவருக்கு நான் அன்பு செலுத்தினேன். தற்போது, என் கனவுகளும், நம்பிக்கைகளும் நொறுங்கிய நிலையில் நிற்கிறேன்.

Ad

இதுவும் கடந்துபோகும் என்று நம்புகிறேன். நான் யாரிடமும் எதையும் விளக்க வேண்டிய அவசியமில்லை. என் கணவர் மீது குறை சொல்லி அதன்மூலம் ஆதாயம் தேட முயற்சிக்க மாட்டேன். நான் முதிர்ச்சியடைந்திருக்கிறேன்.

இது என் வாழ்க்கை; நானே எதிர்கொள்கிறேன். என் குழந்தைகளுக்காகவும், என்னைச் சுற்றி இருப்பவர்களையும் மனதிற்கொண்டு சரியான முடிவை எடுத்திருக்கிறேன். இறுதியாக, நான் இதுவரை எதையும் இழக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

vanitha vijayakumar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe