ADVERTISEMENT

இயக்குநர் வசந்தபாலன் படத்தில் இணைந்த வனிதா விஜயகுமார்!

02:38 PM Aug 10, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வசந்தபாலன், தன்னுடைய பள்ளிக்கால நண்பர்களுடன் இணைந்து 'அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இந்நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தை இயக்குநர் வசந்தபாலன் இயக்குகிறார். இப்படத்தில், 'கைதி', 'மாஸ்டர்' ஆகிய படங்களில் நடித்துப் பிரபலமான அர்ஜுன் தாஸ் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக துஷாரா நடிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

கடந்த பிப்ரவரி மாதத்தின் மத்தியில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு கரோனா பரவல் காரணமாக பாதியில் தடைப்பட்டது. பின், கரோனா பரவலின் தாக்கம் குறையத்தொடங்கியதையடுத்து, மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்கிய படக்குழு, தற்போது முழுவீச்சில் படப்பிடிப்பு நடத்திவருகிறது. இந்நிலையில், இப்படத்தில் நடிகை வனிதா விஜயகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், அறந்தாங்கி நிஷா, பவா லக்ஷ்மணன், அர்ஜுன் சிதம்பரம் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT