
கடந்த ஜூன் மாதம் வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அப்போது இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதன்பின் இருவரும் இணைந்து அவர்களின் யூ-ட்யூப் சேனலில் வீடியோக்களை தயாரித்து வெளியிட்டு வந்தார்கள். திடீரென இருவரின் உறவிலும் விரிசல் விழ, பிரிந்துவிட்டனர். அப்போது மிகவும் உருக்கமான ஒரு அறிக்கையை வெளியிட்டார் வனிதா. இந்நிலையில் மீண்டும் பீட்டர் பாலுடன் சமரசமாகுவதற்காக வனிதா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்று செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்து ட்வீட் செய்துள்ளார் வனிதா. அதில், “நான் மீண்டும் இணைந்து வாழ முயன்றதாகவும் ஆனால் அது நிராகரிக்கப்பட்டதாகவும், அடிப்படை ஆதாரமற்ற வதந்திகள் உலவுகின்றன. மாயையிலிருந்து வெளியே வாருங்கள். என் வாழ்க்கையில் யாருமே என்னை நிராகரித்ததில்லை. நான் தான் யாரையாவது நிராகரித்திருக்கிறேன்.
பிரிந்தது குறித்து நான் கடைசியாக வீடியோ வெளியிட்டதற்கு பிறகு நாங்கள் இருவரும் பேசினோம். அவர் முதிர்ச்சியடைந்தவர், அவரது முடிவை எடுத்துவிட்டார். அந்த முடிவோடு என்னால் வாழ முடியாது. ஆனால் நான் சொன்னது போல அவரது முன்னாள் மனைவி, குழந்தைகள் என யாருமே வேண்டாம் என்று சொன்னதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது. இப்போது உங்களுக்கு உண்மை தெரியும். நான் முட்டாளாகவும், அப்பாவியாகவும் இருந்ததால் ஏமாற்றப்பட்டிருக்கிறேன்.
காதலில் என்னுடைய அதிர்ஷ்டம் என்ன என்பதை நான் புரிந்து அதை ஏற்றுக் கொண்டுவிட்டேன். எதிர்காலத் திட்டங்களில் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறேன். எனவே இதற்கு மேல் யூகிப்பதை, விவாதம் செய்வதை நிறுத்துங்கள். அவரோடு எனக்கு சட்டரீதியாகவோ, உணர்வு ரீதியாகவோ எந்த ஒரு உறவும் இல்லை. நான் என் வழியில் என் வலியைக் கையாள்கிறேன். அத்தனை அன்புக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி. பாசிட்டிவ்வான சிந்தனையுடன் என் பயணம் தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.