/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-1_171.jpg)
பிக்பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது கணவராக திருமணம் செய்துகொண்டார். இது திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் பீட்டர் பாலுக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இச்சம்பவம் குறித்து வனிதா சமூகவலைத்தளத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில்....
"நேற்றைய தினத்தை என்னால் மறக்கவே முடியாது. கடவுள் எங்களுக்கு ஏதோ ஒரு காரணத்திற்காகவே இந்த சோதனை கொடுத்துள்ளார். நிச்சயம் அதிசயம் நடக்கும், நான் கடவுளை நம்புகிறேன். எங்களின் காதல் வலிமையானது. எங்களை கைவிடாது. அவருக்காக நானும், எனக்காக அவரும் எப்போதும் இருப்போம். திருமணம் என்பது சட்ட ரீதியான ஒரு அங்கீகாரமோ ஒரு அச்சிடப்பட்ட காகிதமோ அல்ல, அது ஒரு உணர்வு பூர்வமானது. உனக்கு நான், எனக்கு நீ என ஆன்மாக்கள் ஒன்றிணையும் சங்கமம். சிலருக்கு வேண்டுமானால், திருமணமும், விவாகரத்தும் வெறும் பேப்பராக இருக்கலாம். பீட்டர் பால், குணமடைந்து வர வேண்டும் என பிரார்த்தனை செய்யும் ரசிகர்களுக்கும், அவரது உடல் நலனிலும், எங்கள் வாழ்க்கை நலனிலும் அக்கறை காட்டும் அன்பு உள்ளங்களுக்கு எப்போதுமே நான் நன்றி கடன் பட்டுள்ளேன். வாழ்க்கை மிகவும் குறுகியது" என பதிவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)