Advertisment

மாலையும் கழுத்துமாக வனிதா விஜயகுமார்! ரசிகர்கள் குழப்பம்!

gfshehdehe

சர்ச்சைகளுக்குப் பேர்போன நடிகை வனிதா விஜயகுமார் இரண்டுமுறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர். பிக்பாஸ் 3 மூலம் பிரபலமான இவர், சென்ற ஆண்டு ஜூன் மாதம் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணம் முடிந்து சில தினங்களிலேயே வனிதா விஜயகுமாருக்கும்பீட்டர் பாலுக்கும் பிரச்சினை ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். இதையடுத்து, வட இந்தியாவைச் சேர்ந்த பைலட் ஒருவரை நடிகை வனிதா விஜயகுமார் ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாக தகவல் ஒன்று சில மாதங்களுக்கு முன் சமூகவலைதளங்களில் உலா வந்தது. இதற்கு, “நான் இப்போதும் சிங்கிளாகவே இருக்கிறேன். வதந்திகளை நம்ப வேண்டாம்”என வனிதா விஜயகுமார் விளக்கமளித்தார்.

Advertisment

இந்நிலையில்தற்போது நடிகை வனிதா விஜயகுமார், நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதைக் கண்ட ரசிகர்கள் வனிதாவுக்கு நான்காவது திருமணம் நடந்துவிட்டதாகவும், அவருக்கு வாழ்த்து சொல்லியும் கமன்ட் செய்துவருகின்றனர். மேலும் சிலர், இது படப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படம் எனவும் பதிவிடுகின்றனர். இன்னும் சில ரசிகர்கள், உண்மையில் என்ன நடந்தது என்று தெரியாததால் குழம்பிப் போயுள்ளனர். இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது.

Advertisment

vanitha vijayakumar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe