Advertisment

"தென்னிந்தியாவின் ஷாருக்கான் அவர்" - வனிதா புகழாரம்

vanitha speech in aneethi press meet

Advertisment

இயக்குநர் வசந்தபாலன் அர்ஜுன் தாஸை கதாநாயகனாக வைத்து 'அநீதி' படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தில் அர்ஜுன் தாஸிற்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். இப்படத்தை இயக்குநர் வசந்தபாலனின் 'அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ்' நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் மூலம் வசந்தபாலன் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார். வசந்தபாலனின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ்இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஜூலை 21 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்ற நிலையில் படக்குழுவினர்பலரும் கலந்து கொண்டு பேசினர்.

அப்போது நடிகை வனிதா விஜயகுமார் பேசுகையில், "நான் என் கம்பேக்கிற்காக சில படங்களில் நடித்து வருகிறேன். ஆனால், இந்த படம் முதலில் ரிலீஸ் ஆகிறது. ரொம்ப பெருமையா இருக்கு. வசந்தபாலன் சார் ஒரு மாஸ்டர் ஃபிலிம்மேக்கர். அர்ஜுன் தாஸ் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கார். அவருக்கே வில்லன் நான். அவருடைய குரலுக்கு எல்லாரும் ரசிகர்கள் ஆகிவிடுவார்கள். ஸ்க்ரீனில் பார்க்கும் போது ஷாருக்கானை பார்த்தது போல் இருந்தது. அவர்தான் தென்னிந்தியாவின் ஷாருக்கான். அந்த வளர்ச்சி கண்டிப்பாக அவரை வந்து சேரும்" என்றார்.

aneethi movie vanitha vijayakumar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe