Advertisment

எனக்கு நான்காவது திருமணமா..? வனிதா விஜயகுமார் விளக்கம்!

vdgffb

Advertisment

நடிகை வனிதா விஜயகுமார் சென்ற ஆண்டு ஜூன் மாதம் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் முடிந்து சில தினங்களிலேயே வனிதா விஜயகுமாருக்கும், பீட்டர் பாலுக்கும் பிரச்சினை ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். இந்நிலையில், வட இந்தியாவைச் சேர்ந்த பைலட் ஒருவரை நடிகை வனிதா விஜயகுமார் ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாக புதிய தகவல் ஒன்று சமூகவலைதளங்களில் உலா வந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில் தன் நான்காவது திருமணம் குறித்து நடிகை வனிதா விஜயகுமார் சமூகவலைதளத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில்... "உங்கள் அனைவருக்கும் ஒன்றைத் தெரியப்படுத்த விரும்புகிறேன். நான் இப்போதும் சிங்கிளாகவே இருக்கிறேன். அப்படியே இருக்க விரும்புறேன். எந்தவொரு வதந்திகளையும் பரப்பவோ, நம்பவோ வேண்டாம்" என பதிவிட்டுள்ளார்.

vanitha vijayakumar
இதையும் படியுங்கள்
Subscribe