/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/91_7.jpg)
நடிகர் விக்ரம், அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் விக்ரமும் அவரது மகன் த்ருவ் விக்ரமும் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்திற்கு தற்காலிகமாக 'விக்ரம் 60' எனப் பெயரிடப்பட்டுள்ளது. படத்திற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வரும் விக்ரம், இப்படத்திற்குப் பிறகு 'கோப்ரா' படத்தில் எஞ்சியுள்ள காட்சிகளில் நடிக்க இருக்கிறார். இவ்விரு படங்களை நிறைவு செய்த பின்னரே 'விக்ரம் 60' படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பிரபல சின்னத்திரை நடிகை வாணி போஜன், இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர், விக்ரம் அல்லது த்ருவ் விக்ரமிற்கு ஜோடியாக நடிக்கவும் வாய்ப்பிருக்கிறதுஎனக் கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)