Advertisment

”எங்க டீம் பற்றி உனக்கு தெரியாதா, இப்படித்தான் இருக்கும்னு சொன்னார்” - வாணி போஜன் பேச்சு

Vani Bhojan

Advertisment

அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய், வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் 'தமிழ் ராக்கர்ஸ்'. ஏ.வி.எம் ப்ரோடக்‌ஷன்ஸ் மற்றும் சோனி லைவ் இணைந்து தயாரித்துள்ள இந்த வெப்சீரிஸ் ஆகஸ்ட் 19ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், தமிழ்ராக்கர்ஸ் குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

நிகழ்வில் நடிகை வாணி போஜன் பேசுகையில், “இந்த சீரிஸின் கதை ரொம்பவும் தனித்துவமாக இருக்கும். இது கண்டிப்பாக சொல்லப்பட வேண்டிய கதை. இயக்குநர் அறிவழகன், அருண் விஜய் மற்றும் ஏ.வி.எம். நிறுவனத்தோடு இணைந்து பணியாற்றியதில் ரொம்பவும் மகிழ்ச்சி. படத்தில் எல்லா டயலாக்ஸும் டெக்னிக்கலாக இருந்ததால் உச்சரிக்கவே கஷ்டமாக இருந்தது. காலை 7 மணிக்கு ஷுட் ஆரம்பித்தால் மறுநாள் காலை 7 மணிவரை ஷூட் போகும். அருண் விஜய் நல்ல எனர்ஜியோடு இருப்பார். ஆனால், எனக்கு டயர்டாகிவிடும். அறிவழகன் சாரிடம் இது பற்றி கேட்டால் எங்க டீம் பற்றி உனக்குத் தெரியாதா, இப்படித்தான் எங்க ஷூட்டிங் போகும் என்று சொன்னார். ஆனால், செட்டில் என்னை நல்லபடியாக பார்த்துக்கொண்டார்கள். சீரிஸ் ரொம்பவும் நல்லா வந்திருக்கு. அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறோம்” எனத் தெரிவித்தார்.

vani bhojan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe