Advertisment

“நாம அரசியலுக்கு வந்தா என்ன..." - வாணி போஜன் பேச்சு

vani bhojan speech at Sengalam Trailer Launch

எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கத்தில் வாணி போஜன், கலையரசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'செங்களம்'. அபினேஷ் இளங்கோவன் தயாரித்துள்ள இப்படத்திற்கு தரன் இசையமைத்துள்ளார். இப்படம் நேரடியாக ஜீ 5 ஓடிடி தளத்தில் வருகிற 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டு பேசினர்.

Advertisment

அப்போது வாணி போஜன் பேசுகையில், "ஜீ 5 நிறுவனத்திலிருந்து படம் பண்ண அழைப்பு வந்தாலே உடனே ஓகே சொல்லி விடுவேன். எனக்கு தெரியும் நல்ல கதையைத்தான் அவர்கள் கொடுப்பார்கள் என்று. நான் முதலில் ஒன்லைன் மட்டும் தான் கேட்டேன். பின்பு படக்குழுவிடம் நான் இதற்கு சரியாக இருப்பேனா எனக்கேட்டேன். அவர்களும் என்னை ஊக்குவித்தார்கள். அதனால் நடிக்க ஒத்துக்கிட்டேன்.

Advertisment

பின்பு திடீரென்று எனது அப்பா உடல்நிலை சரியில்லாததால் இப்படத்திலிருந்து விலகுமாறு படக்குழுவிடம் கேட்டேன். பின்பு சரியாக நடிக்க முடியுமாதெரியவில்லை என்றுசொன்னன். அவர்கள் பரவாயில்லை உன்னால் முடியும் எனஊக்குவித்தார்கள். எந்த படத்துக்கும் இது போன்று பணியாற்றியதில்லை. இப்படம் பண்ணும்போதே நாமஅரசியலுக்கு வந்தா என்ன? என யோசித்து பார்ப்பேன். அந்தளவுக்கு படத்தின் கதை எனக்குள் நிறைய விஷயங்களை மாத்தியிருக்கு" என்றார்.

vani bhojan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe