/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/33_60.jpg)
நடிகர் பரத்தின் 50வது படமாக உருவாகியுள்ளது 'லவ்' திரைப்படம். இப்படத்தில் கதாநாயகியாக வாணி போஜன் நடிக்க விவேக் பிரசன்னா, ராதா ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆர்.பி.பாலா தயாரித்து இயக்கும் இப்படத்திற்கு ரோனி ரபேல் இசையமைக்கிறார். இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டு பேசினர்.
நடிகை வாணி போஜன் பேசுகையில், "முதலில் பரத்துடன் இன்னொரு படம் உடனே நடிக்க வேண்டுமா? என யோசித்தேன் ஆனால் இந்தக் கதை மிரள் படத்திலிருந்து மிகவும் மாறுபட்ட கதை. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தப் படத்தில் பரத்திடம் நிறைய அடி வாங்கினேன். நிறைய ஆக்சன் காட்சிகள் இருக்கிறது. பல சுவாரஸ்யங்கள் படத்தில் இருக்கிறது. இந்தப் படம் எங்களுக்கு மிக நெருக்கமான படம். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி" என்றார்.
நடிகர் பரத் பேசுகையில், "என்னுடைய 50வது படமாக இப்படம் அமைந்தது மகிழ்ச்சி. வாணி போஜனுடன் மிரள் படத்தில் நடிக்கும்போது இந்தக்கதை கேட்க சொன்னேன்.அவர் உடனே பிடித்து இப்படத்தில் வந்தார். அவருக்கும் எனக்கு இணையான பாத்திரம்; மிகச் சிறப்பாக போட்டி போட்டு நடித்துள்ளோம். இப்படம் உங்களைக் கண்டிப்பாகத் திருப்திப்படுத்தும்" என்றார்.
இயக்குநர் தயாரிப்பாளர் பாலா பேசுகையில், "பரத்திடம் பல கதைகள் சொல்லி கடைசியில் இந்தக்கதை ஓகே ஆனது. P G முத்தையா சொல்லித்தான் இந்தப்படம் நடந்தது. நான் அடுத்து எடுக்கும் படத்திற்கும் பரத் சார் தான் ஹீரோ. டிரெய்லர் விழாவில் மீதம் சொல்கிறேன் எல்லோருக்கும் நன்றி" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)