bharath

Advertisment

'காளிதாஸ்' படத்தின் வெற்றி, 'ராதே' படத்தில் சல்மான் கானுடன் இணைந்து நடித்தது என முழு உற்சாகத்தில் உள்ள நடிகர் பரத், தமிழில் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில்உருவாகவுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் சக்திவேல் இயக்குகிறார். ஆக்சிஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில், பரத்திற்கு ஜோடியாக பிரபல சின்னத்திரை நடிகை வாணி போஜன் நடிக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது முல்லையாக நடித்து வரும் காவ்யா அறிவுமணி இந்தப் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகிறார். இவர், படத்தில் முக்கியக்கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. படத்தின் பணிகளை பூஜையுடன் தொடங்கியுள்ள படக்குழு, சென்னை, தென்காசி, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளது.