Advertisment

பரத்துடன் இணைந்த பிரபல நடிகை

vani bhojan act with bharath new film

தமிழ் சினிமாவில் 'பாய்ஸ்' படத்தின் மூலம் அறிமுகமான பரத், 'செல்லமே', 'சேவல்', காதல்', எம் மகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள்மத்தியில் பிரபலமானார். இவர்நடிப்பில் கடைசியாக வெளியான நடுவண் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத்தொடர்ந்து சில படங்களில் நடித்து வரும் பரத் அடுத்ததாக அறிமுக இயக்குநர் ஆர்.பி பாலா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இவர் 'லுசிபர்', 'மரைக்காயர்', 'குருப்' உள்ளிட்ட பல படங்களுக்கு தமிழில் வசனங்கள் மற்றும் பாடல்களைஎழுதியுள்ளார்.

Advertisment

பரத்தின் 50வது படமாகஉருவாகவுள்ள இப்படத்தில் கதாநாயகியாக வாணி போஜன் நடிக்கவுள்ளார். படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் விவேக் பிரசன்னா, பிக் பாஸ் புகழ் டேனி ஆகியோர் நடிக்கவுள்ளனர்.இப்படத்தை ஆர்.பி.பிலிம்ஸ் நிறுவனம்தயாரிக்கிறது. திரில்லர் கலந்த பேமிலி டிராமா திரைப்படமாக உருவாகும்இப்படத்தின் பூஜை சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராகதயாரிப்பாளர் தாணு கலந்து கொண்டார்.விரைவில் இப்படத்தின் தலைப்பு மற்றும் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் எனப் படக்குழுதெரிவித்துள்ளது.

Advertisment

vani bhojan bharath
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe