"அவர் மிகச்சிறந்த நண்பராக பழகுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை" - நடிகை வாணி போஜன் 

hdfjdfj

ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் சார்பில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இணைந்து வழங்கும் தமிழ் இணைய தொடர் “ட்ரிப்ள்ஸ்”. இதன் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் காமெடித் தொடரான “ட்ரிபிள்ஸ்” டிசம்பர் 11, 2020 அன்று டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி தளத்தில் ப்ரத்யேகமாக வெளியிடப்படுகிறது. இந்த நிலையில் “ட்ரிபிள்ஸ்” தொடரின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவை சேர்ந்தவர்கள் ஊடகம், பத்திரிக்கை மற்றும் ரசிகர்களுடன் நேற்று கலந்துரையாடினர். அப்போது அந்த கலந்துரையாடலில் நடிகை வாணி போஜன் பேசும்போது....

"நடிகர் ஜெய்யுடன் இணைந்து நடித்தது மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. மிகச்சிறந்த நண்பராக அவர் பழகுவார் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை. எளிமையான அவரது இயல்பு படப்பிடிப்பில் எனக்கு பேருதவியாக இருந்தது. “ட்ரிபிள்ஸ்” போன்ற ஒரு அட்டகாசமான இணைய தொடரில் பங்குகொள்ளும் வாய்ப்பு கிடைத்தற்கு நான் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். நான் மிகவும் தேர்ந்தெடுத்த கதைகளில் மட்டுமே வேலை பார்த்து வருகிறேன் அந்த வகையில் “ட்ரிபிள்ஸ்” மிக தரமான தொடர். நான் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படங்களின் தீவிர ரசிகை அவர் நிறுவனம் தயாரிக்க, இத்தொடரில் பங்கு கொண்டது பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. ஒவ்வொரு காட்சியும் சரியாக வர வேண்டும் என கடுமையக உழைத்திருக்கிறார் இயக்குநர் சாரு. அவரது கடின உழைப்பால் இத்தொடர் மிக அழகானதாக வந்திருக்கிறது" என்றார்.

jai vani bhojan
இதையும் படியுங்கள்
Subscribe