Advertisment

கமல் அரசியலை விட்டு விடுங்கள் - வானதி ஸ்ரீனிவாசன் சூசகம்

Vanathi Srinivasan parise kamalhaasan vikram movie

Advertisment

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள 'விக்ரம்' படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுவெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம்உலகம் முழுவதும் ரூ. 500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது வருகிறது. இதனிடையே படைத்த பார்த்த பலரும் தங்களின் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் விக்ரம் படத்தை பார்த்த பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் நடிகர் கமல்ஹாசனை பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "தேர்தல் களத்தில் உங்களை வெற்றி பெற்றதற்கு மீண்டும் ஒரு முறை மகிழ்கிறேன். விக்ரம் திரைப்படம் பார்த்தேன். உங்கள் கலை பணியால் தொடர்ந்து மக்களை மகிழ்விக்க வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்தாண்டு நடைபெற்றுமுடிந்த சட்டமன்ற தேர்தலில் கோயம்புத்தூர்தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிட்ட கமல்ஹாசன் பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசனிடம்தோல்வி அடைந்தார். இந்நிலையில் அதைசுட்டிக்காட்டி கமல்ஹாசனை அரசியல் பணியை விட்டுவிட்டு கலை பணியில் மட்டும் கவனம் செலுத்துங்கள் என்று சூசகமாக வானதி ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார்.

Advertisment

bjp (170 Makkal needhi maiam Vanathi Srinivasan ACTOR KAMAL HASSHAN
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe