vanangaan release update

பாலா தற்போது இயக்கி வரும் படம் 'வணங்கான்'. இதில் முன்பு சூர்யா கமிட்டாகி நடித்து வந்த நிலையில், சில காரணங்களால் விலகிவிட்டார். மேலும் கதாநாயகியாக க்ரித்தி ஷெட்டியும் ஒப்பந்தமாகியிருந்த நிலையில் அவரும் விலகிவிட்டார். இதையடுத்து சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய்யை வைத்து பாலா இயக்கி வந்தார். கன்னியாகுமரியில் படப்பிடிப்பு தொடங்கி, பல்வேறு கட்டங்களாக பல இடங்களில் நடந்து இறுதிக்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையில் நடந்தது.

இப்படத்தை சுரேஷ் காமாட்சி மற்றும் பாலா இணைந்து தயாரிக்க கதாநாயகியாக ரோஷிணி பிரகாஷ் நடித்துள்ளார். சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்தில் அனைத்து பாடல்களுக்கும் வைரமுத்து வரிகள் எழுதியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் கடந்த டிசம்பர் மாதம் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டது. டீசர் பிப்ரவரியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனிடையே மலையாள நடிகை மமிதா பைஜு, இப்படத்தில் நடித்தபோது பாலா அடித்ததாகவும் அதன் காரணத்தால் படத்தை விட்டு வெளியேறியதாகவும் பகிர்ந்திருந்தார். அது கோலிவுட்டில் சற்று பரபரப்பை எற்படுத்த பின்பு “நான் மனரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ அல்லது வேறு எந்த விதமான துஷ்பிரயோகத்தையும் அந்த படத்தின் படப்பிடிப்பின் போது, அனுபவிக்கவில்லை. இதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். பிற தொழில் ரீதியான ஒப்பந்தங்கள் காரணமாகவே, அந்தப் படத்திலிருந்து விலகிவிட்டேன்” என விளக்கமளித்திருந்தார்.

Advertisment

இந்த நிலையில் இப்படம் கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என முன்னர் அறிவிப்பு வெளியான நிலையில் சில காரணங்களால் வெளியாகவில்லை. இதையடுத்து தற்போது படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. ஜூலையில் படம் வெளியாகும் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு பாலா, அருண் விஜய் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 12ல் ஷங்கர் - கமல் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படம் வெளியாகிறது குறிப்பிடத்தக்கது.