gv prakash

சன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில், ராஜேஷ் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம்'வணக்கம்டா மாப்ள'. இப்படத்தில் ஜி.வி. பிரகாஷிற்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் நடித்துள்ளார். ஆனந்த்ராஜ், டேனியல், ரேஷ்மா உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம், திரையரங்க வெளியீடாகஇல்லாமல் நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்பப்படுகிறது.

Advertisment

தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ஆம் தேதி இப்படத்தை சன் டிவியில் ஒளிபரப்பு செய்துவிட்டு, பின் அடுத்த சில தினங்களில் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியிட தயாரிப்பு தரப்பு திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில், படத்தின் வெளியீட்டில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 'வணக்கம்டா மாப்ள' திரைப்படம் முதலில் ஏப்ரல் 16ஆம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. அதன் பிறகே, தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment