fegege

நடிகர் விஜய் தற்போது இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். தற்காலிகமாக 'தளபதி 65' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் சமீபத்தில் ஜார்ஜியா சென்றார். அங்கு ஒருமாதமாக நடைபெற்ற படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து, நடிகர் விஜய் சென்னை திரும்பினார். இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது தமிழகத்தில் கரோனா பரவலின் தீவிரம் காரணமாக இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

Advertisment

இதற்கிடையே விஜய்யின் 66வது படத்தைப் பிரபல தெலுங்கு டைரக்டர் வம்சி பைடி பல்லி இயக்கவுள்ளதாக சமீபத்தில் தகவல் பரவியது. தெலுங்கு இயக்குநர் வம்சி, தமிழில் கார்த்தி நடித்த ‘தோழா’ படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில், விஜய் படத்தை இயக்குவது குறித்து இயக்குநர் வம்சி தற்போது வாய் திறந்துள்ளார். அதில்... ‘’நான் விஜய் படத்தை இயக்கவுள்ளது உண்மைதான். இதனை பெரிய வாய்ப்பாக கருதுகிறேன். படத்தை தில்ராஜூ தயாரிக்கிறார். நான் இதுவரை எடுத்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் இப்படம் தயாராகிறது’’ என்றார்.