அடுத்த 'மங்காத்தா'வாக உருவாகும் 'வலிமை'...புதிய அப்டேட்..!

அஜித், எச்.வினோத், போனிகபூர் கூட்டணியில் இரண்டாவது படமாக உருவாகிறது ‘வலிமை’ படம். அதிரடி சண்டை படமாகத்தயாராகும் இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாகக் கூறப்படும் நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு 60% சதவிதம் வரை முடிந்துள்ளது.

gdg

தற்போது கரோனா தொற்று காரணமாக இதன் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில் எச்.வினோத் முதன்முறையாக அப்படம் குறித்து வாய் திறந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அஜித் நடித்ததிலேயே அவருக்கு மிகவும் பிடித்த படம் மங்காத்தா எனவும், அஜித் ரசிகர்களுக்காக அடுத்த மங்காத்தாவாக வலிமையை உருவாக்குவதாக அவர் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. கரோனா பீதி காரணமாக வலிமை படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப் படக்குழு திட்டமிட்டு வருகின்றனர்.

ajith valimai
இதையும் படியுங்கள்
Subscribe