Advertisment

வலிமை அப்டேட்... முதலமைச்சர் தொடங்கி ஆட்டோ வரை... காத்திருக்கும் அஜித் ரசிகர்கள்!

valimai

Advertisment

'நேர்கொண்ட பார்வை' படத்திற்குப் பிறகு, அஜித் - எச்.வினோத் இணையும் படம் 'வலிமை'. கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் ஆரம்பிக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு, கரோனா தொற்று பரவலால் தாமதமாகி, சமீபத்தில் மீண்டும் தொடங்கியது.

சென்னையில் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த பிறகு, ஹைதராபாத்தில், படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கியது. இதில், அஜித்தும் கலந்துகொண்டு நடித்து வந்தார். இந்தநிலையில்,ஹைதராபாத்தில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது, அவருக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

படம் பூஜை போட்டதற்கு பிறகு வலிமை படக்குழுவிடம் இருந்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவல்களும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இதனால் இப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூரிடம் அப்டேட் கேட்டு ட்விட்டரில் அவ்வப்போது அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வந்தனர். ஒரு கட்டத்தில் கடுப்பான சில ரசிகர்கள் கொச்சையாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட தொடங்கினார்கள்.

Advertisment

மற்ற நடிகர்களின் படங்களின் அப்டேட்கள் வரும்போதெல்லாம் அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் குறித்து சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதனால் அஜித் தரப்பிலிருந்தும் இதற்கு விளக்கம் தெரிவித்து ஒரு சிறிய அறிக்கை வெளியிட்டார் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா.

இந்நிலையில் சமூகவலைதளத்தில் வலிமை அப்டேட் கேட்டு வந்தநிலையில் அஜித் ரசிகர் ஒருவர் தனது ஆட்டோவில் வலிமை அப்டேட்டிற்காக காத்திருப்பதாக ஸ்டிக்கர் ஒட்டியிருப்பது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த வாரம் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கூட ‘வலிமை அப்டேட் கேட்டு சொல்லுங்க, உங்களுக்கு ஓட்டு போடுறோம் என்று அஜித் ரசிகர்கள் கூறிய வீடியோவும் வைரலானது குறிப்பிடத்தக்கது.

ACTOR AJITHKUMAR
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe