Skip to main content

வலிமை படத்தின் டீசர் குறித்து வெளியான புதிய தகவல்!

Published on 17/09/2021 | Edited on 17/09/2021

 

ajith

 

‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்குப் பிறகு எச். வினோத் - அஜித் - போனி கபூர் கூட்டணி ‘வலிமை’ படத்திற்காக மீண்டும் இணைந்தது. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஹூமா குரேஷி நடிக்க, வில்லனாகத் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பானது, கரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டங்களாகத் தடைப்பட்டது. இருப்பினும், மிகுந்த நெருக்கடிகளுக்கு இடையே தொடர்ந்து படப்பிடிப்பு நடத்திய படக்குழு, மொத்த படப்பிடிப்பையும் நிறைவுசெய்து, தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்திவருகிறது. 

 

இந்த நிலையில், வலிமை படத்தின் டீசர் வெளியீடு குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அடுத்த வாரத்தில் டீசரை வெளியிட வலிமை படக்குழு திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த டீசரில் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யும் வகையில் பைக் சாகசத்தில் அஜித் ஈடுபடும் காட்சியும் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழு தரப்பிலிருந்து வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்