Advertisment

வெளிநாடு செல்லும் திட்டத்தில் வலிமை படக்குழு!

ajith

‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்குப் பிறகு எச். வினோத் - அஜித் - போனி கபூர் கூட்டணி ‘வலிமை’ படத்திற்காக மீண்டும் இணைந்தது. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடிக்க, வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பானது கரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டங்களாகத் தடைபட்டது. இருப்பினும், மிகுந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்திய படக்குழு ஒரு சண்டைக்காட்சியைத் தவிர்த்து எஞ்சிய காட்சிகளுக்கான படப்பிடிப்பை நிறைவு செய்தது.

Advertisment

இந்த நிலையில், வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வடிவில் கடந்த ஞாயிறன்று வெளியிடப்பட்டது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த மோஷன் போஸ்டர், யூ-டியூப் தளத்தில் இந்திய அளவில் அதிகபட்ச லைக்ஸ்களைப் பெற்ற மோஷன் போஸ்டர் எனும் சாதனையைப் படைத்துள்ளது. தீபாவளி தினத்தன்று படத்தைத் திரைக்கு கொண்டுவரும் யோசனையில் உள்ள படக்குழு, எஞ்சியுள்ள சண்டைக்காட்சியை விரைந்து படமாக்கத் திட்டமிட்டுள்ளது. அதற்காக வலிமை படக்குழு மிகக்குறைந்த அளவிலான ஆட்களுடன் விரைவில் ஐரோப்பா பயணிக்கவுள்ளது.

Advertisment

valimai ACTOR AJITHKUMAR
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe