/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Boney-Kapoor_0.jpg)
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் 'வலிமை'திரைப்படத்தின் படப்பிடிப்பு, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியாவில் படமாக்க வேண்டிய அனைத்து காட்சிகளின் படமாக்கலை நிறைவு செய்துள்ள படக்குழு, எஞ்சியுள்ள ஒரு சண்டைக் காட்சியை வெளிநாட்டில் படமாக்கத் திட்டமிட்டுள்ளது. தற்போதுபின்னணி இசை உள்ளிட்ட இறுதிகட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், ‘வலிமை’ படத்தின் தமிழ்நாடு உரிமை குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் புதிய அப்டேட் கொடுத்துள்ளார். அதன்படி, ‘வலிமை’ படத்தின் தமிழ்நாடு உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனமும், அன்புச்செழியனின் கோபுரம் சினிமாஸ் நிறுவனமும் கைப்பற்றியுள்ளன. இத்தகவலை அறிந்து உற்சாகமான அஜித் ரசிகர்கள், சமூக வலைதளங்களில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
‘வலிமை’ படத்தினை ஆகஸ்ட் மாதம் திரைக்கு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள படக்குழு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அஜித்தின் பிறந்த நாளான மே 1ஆம் தேதி வெளியிட உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)