நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித் குமார் ஹெச்.வினோத்துடன் இரண்டாவது முறையாக இணைந்து வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ajithkumar

Advertisment

Advertisment

அஜித்தின் முந்தைய படத்தை தயாரித்த போனி கபூர்தான் இப்படத்தையும் தயாரிக்கின்றார். தற்போது இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் அஜித்தை தவிர வேறு எந்தெந்த நடிகர்கள் அவருடன் நடிக்கின்றனர் போன்ற அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. மிகவும் ரகசியமாக ஷூட்டிங்கை நடத்தி வருகின்றனர். ஆனால், கேங் லீடர் படத்தில் வில்லனாக நடித்த தெலுங்கு நடிகர் கார்த்திகேயா தான் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அதேபோல அஜித்திற்கு ஜோடியாக யாமி கௌதம் நடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

கடந்த 10ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் தற்போது முடிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. விரைவில் இரண்டாம் கட்ட ஷூட்டிங் சென்னையில் எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித்குமார் தான் நடிக்கும் படங்களில் பைக் ஸ்டண்ட் மற்றும் சில சண்டை காட்சிகளில் டூப் போடாமல் தானே நடிப்பார். அதுபோல இந்த வலிமை படத்தில் அவர் ஒரு ரிஸ்க் எடுத்து ஒரு ஸ்டண்ட் காட்சியில் நடித்திருக்கிறாராம். மேலிருந்து 100 அடி உயரத்திலிருந்து டூப் இல்லாமல் அஜித் குதித்து ஒரு ஸ்டண்ட் காட்சியில் நடித்திருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.