சீனாவின் வுஹானில் தொடங்கி தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 6518 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த கரோனா வைரசால் 1,69,610 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தற்போது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ள இந்த வைரஸ் இதுவரை 110 பேரைப் பாதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் இதுவரை இரண்டு பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

Advertisment

corona virus

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இந்நிலையில் நடிகர் அஜித்குமார் படத்தின் வலிமை ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. அதேபோல சிம்பு நடித்து வரும் மாநாடு படத்தின் ஷூட்டிங்கும் சென்னையில் நடைபெற்று வருகிறது.

கரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் தீவிரம் அடைந்து வருவதால் பல துறைகள் முடங்கியுள்ளன. பல திரைப்படங்களின் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டுள்ளது. படங்களின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisment

அந்த வகையில் மார்ச் 19 ஆம் தேதியிலிருந்து மார்ச் 31 ஆம் தேதி வரை வலிமை மற்றும் மாநாடு படங்களின் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.