லீக்காகும் அஜித் பட ஷூட்டிங் புகைப்படங்கள்!

ajith kumar

அஜித், ஹெச்.வினோத், போனிகபூர் கூட்டணியில் இரண்டாவது படமாக உருவாகிறது ‘வலிமை’ படம். அதிரடி சண்டை படமாக தயாராகும் இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படும் நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு 60% சதவிதம் வரை முடிந்துள்ளது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக இதன் படப்பிடிப்பு மார்ச் மாதத்திலிருந்தே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், வலிமை படம் வரும் தீபாவளிக்கு வெளிவரும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் முன்னர் அறிவித்திருந்தார். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள கரோனா பீதியால் இப்படம் அடுத்த வருடம் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் முக்கியமானகாட்சிகளைப் படமாக்க நீண்ட ஷெட்டியூல் ஒன்றை திட்டமிட்டு, ஹைதராபாத்தில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு வந்தன. ஆனால், அனைத்துமே கரோனா அச்சுறுத்தலால் நிறுத்தப்பட்டுள்ளதால், இப்படப்பிடிப்பை ஒரே கட்டமாக கரோனா பாதிப்புகள் முழுவதுமாக முடிந்த பிறகு நடத்திக்கொள்ளலாம் என அஜித் தெரிவித்துவிட்டதாக கூறப்பட்டது.

h vinoth

இந்நிலையில் சினிமா ஷூட்டிங்கிற்கு அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து வலிமை படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதில் அஜித் உள்ளிட்ட முக்கியமான நடிகர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. சிறுசிறு காட்சிகளை மட்டும் படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். படத்தில் வில்லனாக நடிக்கும் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஷூட்டிங்கில் கலந்துகொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

valimai
இதையும் படியுங்கள்
Subscribe