Skip to main content

லீக்காகும் அஜித் பட ஷூட்டிங் புகைப்படங்கள்!

Published on 24/09/2020 | Edited on 24/09/2020
ajith kumar

 

 

அஜித், ஹெச்.வினோத், போனிகபூர் கூட்டணியில் இரண்டாவது படமாக உருவாகிறது ‘வலிமை’ படம். அதிரடி சண்டை படமாக தயாராகும் இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படும் நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு 60% சதவிதம் வரை முடிந்துள்ளது.

 

கரோனா அச்சுறுத்தல் காரணமாக இதன் படப்பிடிப்பு மார்ச் மாதத்திலிருந்தே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், வலிமை படம் வரும் தீபாவளிக்கு வெளிவரும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் முன்னர் அறிவித்திருந்தார். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள கரோனா பீதியால் இப்படம் அடுத்த வருடம்  ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் முக்கியமான காட்சிகளைப் படமாக்க நீண்ட ஷெட்டியூல் ஒன்றை திட்டமிட்டு, ஹைதராபாத்தில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு வந்தன. ஆனால், அனைத்துமே கரோனா அச்சுறுத்தலால் நிறுத்தப்பட்டுள்ளதால், இப்படப்பிடிப்பை ஒரே கட்டமாக கரோனா பாதிப்புகள் முழுவதுமாக முடிந்த பிறகு நடத்திக்கொள்ளலாம் என அஜித் தெரிவித்துவிட்டதாக கூறப்பட்டது.
 

h vinoth

 

இந்நிலையில் சினிமா ஷூட்டிங்கிற்கு அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து வலிமை படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதில் அஜித் உள்ளிட்ட முக்கியமான நடிகர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. சிறுசிறு காட்சிகளை மட்டும் படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். படத்தில் வில்லனாக நடிக்கும் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஷூட்டிங்கில் கலந்துகொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அஜித் படக்குழு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்

Published on 11/02/2023 | Edited on 11/02/2023

 

Complaint against Ajith's valimai film crew in the commissioner's office

 

இயக்குநர் அ.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் 'வலிமை'. அப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹியூமா குரேஷி நடிக்க, வில்லன் கதாபாத்திரத்தில் கார்த்திகேயா நடித்திருந்தார். இப்படத்தை போனி கபூர் தயாரித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று 200 கோடிக்கு மேல் வசூலித்தது. 

 

இப்படம் வெளியாகி ஒரு வருடத்தை கடக்கவுள்ள நிலையில், ராஜேஷ் ராஜா என்ற குறும்பட இயக்குநர், ‘வலிமை’ படக்குழு மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். வலிமை படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள், 2019 ஆம் ஆண்டு அவர் இயக்கத்தில் வெளியான 'தங்க சங்கிலி' என்ற குறும்படத்தில் இடம்பெற்ற 10 காட்சிகள் போல் உள்ளதாகக் கூறியுள்ளார்.  

 

மேலும், ராஜேஷ் ராஜா இதற்கு முன்பு அ.வினோத்தை சந்திக்க பலமுறை முயற்சித்தும், அவரை சந்திக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் தனது பிரச்சினைக்கு தீர்வு காண இறுதியாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை அணுகியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. 

 

 

Next Story

வலிமை பட விவகாரம்; 5 மாதத்திற்கு பிறகு நடந்த அதிரடி கைது

Published on 06/08/2022 | Edited on 06/08/2022

 

police arrested the person who threw petrol bomb screening valimai theatre

 

இயக்குநர் எச். வினோத் - அஜித் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகி வரும் படம் 'ஏகே 61'. போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

 

ad

 

இதனிடையே கடந்த பிப்ரவரி மாதம் அஜித் நடித்த வலிமை படம் உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியானது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் கழித்து வெளியான அஜித் படம் என்பதால், அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் கட்டவுட்டிற்கு பால் ஊற்றியும் திரையரங்கில் வலிமையை கொண்டாடி  தீர்த்தனர்.  அந்த நேரத்தில் கோவை, காந்திபுரம் 100 அடி சாலையில் வலிமை படம் ஓடிக்கொண்டிருந்த கங்கா யமுனா திரையரங்கு மீது இருசக்கரத்தில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பித்துச் சென்றனர். இது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.  இது தொடர்பாக கோவை காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பித்துச் சென்றவரை தேடி வந்தனர். 

 

இந்நிலையில் இச்சம்பவத்திற்கு காரணமான சிவா என்பவரை 5 மாதம் கழித்து காட்டூர் போலீசார் சென்னையில் வைத்து கைது செய்துள்ளனர். சிவா சென்னை வடபழனியில் தங்கி கட்டிட வேலை பார்த்து வருவதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சென்னை விரைந்த காட்டூர் போலீஸ் வடபழனி போலீசாரின் உதவியுடன் சிவாவை கைது செய்து கோவைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.