/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-1_177.jpg)
அஜித், ஹெச்.வினோத், போனிகபூர் கூட்டணியில் இரண்டாவது படமாக உருவாகிறது ‘வலிமை’ படம். அதிரடி சண்டை படமாக தயாராகும் இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படும் நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு 60% சதவிதம் வரை முடிந்துள்ளது. தற்போது கரோனா தொற்று காரணமாக இதன் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், வரும் அக்டோபர் மாதம் முதல் படப்பிடிப்பை தொடங்க 'வலிமை' படக்குழு ஆயத்தமாகி வருகிறது. இதுகுறித்து அனைத்து நடிகர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், வெளிநாட்டில் எடுக்க திட்டமிட்டிருந்த காட்சிகள் அனைத்தையும் இந்தியாவிலேயே படமாக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே வலிமை படம் வரும் தீபாவளிக்கு வெளிவரும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் முன்னர் அறிவித்திருந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள கரோனா பீதியால் இப்படம் அடுத்த வருடம் கோடை விடுமுறையில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)