ajith wheeling

Advertisment

'நேர்கொண்ட பார்வை' படத்திற்கு பிறகு, அஜித் - எச். வினோத் இணையும் படம் 'வலிமை'. கடந்த வருடம் ஆரமிக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு, கரோனா தொற்று பரவலால் பாதிக்கப்பட்டு, சமீபத்தில் மீண்டும் தொடங்கியது.

சென்னையில் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த பிறகு, ஹைதராபாத்தில், படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கியது. இதில் அஜித்தும் கலந்துகொண்டு நடித்து வந்தார். இந்தநிலையில், கடந்த வார படப்பிடிப்பின்போது, அவருக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. வலிமை படப்பிடிப்பில் அஜித்துக்கு விபத்து நடப்பது, இது இரண்டாவது முறையாகும்.

ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் நடந்த படப்பிடிப்பின்போதும், அஜித் காயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இந்நிலையில் மிக விலை உயர்ந்த பைக் ஒன்றில்அஜித் வீலிங் செய்வது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில்வெளியாகி வருகிறது. இந்த புகைப்படத்தைப் படக்குழு வெளியிடவில்லை, லீக்காகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை பார்க்கும் பலரும் இது அஜித்தானா? இது எடிட் செய்யப்பட்ட புகைப்படமா என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.