'வலிமை' படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அப்டேட் வெளியீடு

valimai second song release update out now

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் 'வலிமை' படத்தில் நடித்துள்ளார். இதில் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்துள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயாபடத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.

அஜித் - எச். வினோத் - போனி கபூர் கூட்டணியில்'நேர்கொண்ட பார்வை' படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் 'வலிமை' படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 'வலிமை' படத்தின் பணிகள் அனைத்தும் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு தீவிரம் காட்டிவருகிறது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="31cc74df-752f-4167-8a84-56d61b9c7cd3" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Bachelor-article-inside-ad_13.jpg" />

சமீபத்தில் வெளியான 'வலிமை' படத்தின் முதல் பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது பாடல்குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'வலிமை' படத்தின் இரண்டாவது பாடல் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் எனக்கூறப்பட்டுள்ளது. இதனால் தற்போது ரசிகர்கள் உற்சாகத்தில்உள்ளனர்.

ACTOR AJITHKUMAR valimai
இதையும் படியுங்கள்
Subscribe