அஜித், எச்.வினோத், போனிகபூர் கூட்டணியில் இரண்டாவது படமாக உருவாகிறது ‘வலிமை’ படம். அதிரடி சண்டை படமாக தயாராகும் இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படும் நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு 60% சதவிதம் வரை முடிந்துள்ளது.
தற்போது கொரோனா தொற்று காரணமாக இதன் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில் வலிமை படம் வரும் தீபாவளிக்கு வெளிவரும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் முன்னர் அறிவித்திருந்தார். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பீதியால் இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருவதாக புதிய தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன. அஜித் இப்படத்தில் கருப்பு நிற முடியோடு இளமை தோற்றத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.