boney kapoor

மலையாளத்தில் கடந்த வருடம் வெளியாகி செம ஹிட்டான படம் ‘ஹெலன்’. 'கும்பலாங்கி நைட்ஸ்' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான அன்னா பென், இந்தப் படத்தில் ஹெலன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். இவரின் தந்தை கதாபாத்திரத்தில் சண்டக்கோழி லால் நடித்திருக்கிறார்.

Advertisment

கனடா செல்வதற்காக படித்துக் கொண்டிருக்கும் வேளையில் பீட்சா கடை ஒன்றில் பார்ட் டைம் வேலையில் இருப்பார் ஹெலன். அப்போது அங்கிருக்கும் குளிர்சாதன அறையில் மாட்டிக்கொள்கிறார். அவர் உள்ளே மாட்டிக்கொண்டு விட்டார் என்பது தெரியாமல் அனைவரும் கடையைமூடிவிட்டு சென்றுவிடுவார்கள். அதன்பின் ஹெலன் எப்படித் தப்பிக்கிறார்என்பதுதான் கதை. மலையாளத்தில் இப்படத்தை வினித் சீனிவாசன் தயாரிக்க மதுக்குட்டி சேவியர் இயக்கியிருந்தார்.

Advertisment

இந்தப் படத்திற்கு மலையாளத்தில் கிடைத்த வரவேற்பை அடுத்து தமிழில் ரீமேக் செய்ய பலரும் இதன் உரிமையை வாங்க போட்டி போட்டுக்கொண்டனர். கடைசியில் நடிகரும் தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் இதன் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கினார்.

இந்நிலையில் ஹிந்தியில் இதன் ரீமேக் உரிமையை 'வலிமை' படத்தின்தயாரிப்பாளர் போனி கபூர்வாங்கியிருக்கிறார். அவருடைய மகளும் நடிகையுமான ஜான்வி கபூர்தான் அன்னா பென் கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment