Advertisment

இணையத்தில் ட்ரெண்டாகும் விசில் தீம்!

valimai movie Whistle Theme released

Advertisment

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் 'வலிமை' படத்தில் நடித்துள்ளார். இதில் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்துள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயாபடத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.'வலிமை' படத்தின் பணிகள் அனைத்தும் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு தீவிரம் காட்டிவருகிறது. சமீபத்தில் வெளியான ‘வலிமை’ படத்தின் மேக்கிங் வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="6639dae7-b06e-4778-9c0d-b62b9ecd0c3f" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Rocky-article-inside-ad_7.jpg" />

இந்நிலையில், ‘வலிமை’ படத்தின் ‘விசில் தீம்’இசையைப் படக்குழு வெளியிட்டுள்ளது. விசில் சவுண்டுடன் தொடங்கும் இந்த தீம்,ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. நடிகர் அஜித்துக்கு யுவன் போடும் தீம் பாடல் எல்லாம் இதுவரை ஹிட் அடித்த நிலையில், அந்த வரிசையில் தற்போது இந்த விசில் தீமும்இணைந்துள்ளது எனரசிகர்கள் கூறிவருகின்றனர். மேலும், இந்த விசில் தீம் தற்போது சமூக வலைதளங்களில் அனைவரின் கவனத்தையும்ஈர்த்துவருகிறது.

Advertisment

ACTOR AJITHKUMAR ajith valimai
இதையும் படியுங்கள்
Subscribe