‘நேர்கொண்ட பார்வை’ வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித் குமார் இயக்குனர் ஹெச்.வினோத்துடன் இரண்டாவது முறையாக இணைந்து வலிமை படத்தில் பணியாற்றுகிறார். இந்த படத்தையும் நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர்தான் தயாரித்து வருகிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ajith boney.jpg)
இந்த படத்திற்கான பூஜை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்னையில் போடப்பட்டது. அதன்பின் இந்த படம் குறித்த எந்தவித அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. இவ்வளவு ஏன் இப்படத்தின் ஷூட்டிங் கடந்த டிசம்பர் 10ஆம் தேதி ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கப்பட்டது என்பதுக்கூட அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருக்கிறது படக்குழு.
அதேபோல வலிமை படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயாதான் வில்லனாக நடிக்கிறார். யாமி கௌதம் அஜித்திற்கு ஜோடியாக நடிக்கிறார் என்று தகவலாகவே வெளியாகியுள்ளது. இப்படி எந்த செய்தியையும் படக்குழு அறிவிக்காமலே ரகசியமாக பணிபுரிகிறது. படபிடிப்பில் அஜித்தின் தோற்றம், பிற நடிகர்களின் தோற்றம் சமூக வலைதளங்களில் கசிந்துவிடக் கூடாது என்பதற்காக ஷூட்டிங்கில் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் வலிமை படத்தின் தயாரிப்பாளர் கலந்துகொண்டார். அப்போது வலிமை படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளா. அதில், “2020ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வலிமை படம் ரிலீஸ்” என்று அறிவித்துள்ளார்.
Follow Us