valimai movie Theme Music update out now

Advertisment

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் 'வலிமை' படத்தில் நடித்துள்ளார். இதில் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்துள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயாபடத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.'வலிமை' படத்தின் பணிகள் அனைத்தும் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு தீவிரம் காட்டிவருகிறது. சமீபத்தில் வெளியான ‘வலிமை’ படத்தின் மேக்கிங் வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="45d17350-319f-4e72-b55e-52ae1a9caee2" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/AVV-article-inside-ad_13.jpg" />

இந்நிலையில், ‘வலிமை’ படத்தின் ‘விசில் தீம்’ குறித்தஅறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ‘வலிமை’ படத்தின் ‘விசில் தீம்’ இன்று (22.12.2021) மாலை 3.30 மணிக்கு வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.