Advertisment

"நான் பார்த்த முதல் முகம் நீ" - அம்மா பாடலின் அப்டேட்டை வெளியிட்ட 'வலிமை' படக்குழு

valimai movie second song promo released

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் 'வலிமை' படத்தில் நடித்துள்ளார். இதில் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்துள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயாபடத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.

Advertisment

அஜித் - எச். வினோத் - போனி கபூர் கூட்டணியில்'நேர்கொண்ட பார்வை' படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் 'வலிமை' படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 'வலிமை' படத்தின் பணிகள் அனைத்தும் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு தீவிரம் காட்டிவருகிறது.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="91626dc4-1b9a-43b8-b225-2a2e4210034b" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Bachelor-article-inside-ad_23.jpg" />

சமீபத்தில் வெளியான ‘வலிமை’ படத்தின்முதல் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது. 'நான் பார்த்த முதல் முகம் நீ..' என்ற தொடங்கும் அம்மா பாடலின் ப்ரோமோவீடியோவை வெளியிட்டு டிசம்பர் 5ஆம் தேதி இந்தப் பாடல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ACTOR AJITHKUMAR valimai ajith
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe