இணையத்தை கலக்கும் அம்மா செண்டிமெண்ட்... யூடியூப் ட்ரெண்டிங்கில் 'வலிமை' பாடல்!

vaimai movie second song goes viral

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் 'வலிமை' படத்தில் நடித்துள்ளார். இதில் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்துள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயாபடத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.

அஜித் - எச். வினோத் - போனி கபூர் கூட்டணியில்'நேர்கொண்ட பார்வை' படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் 'வலிமை' படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 'வலிமை' படத்தின் பணிகள் அனைத்தும் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு தீவிரம் காட்டிவருகிறது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="dd855a51-3e15-48f7-abb2-bc4283bb3827" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/ik-ad%20%281%29_0.jpg" />

சமீபத்தில் வெளியான ‘வலிமை’ படத்தின்முதல் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், நேற்று (05.12.2021) படத்தின் இரண்டாவது பாடலான 'நான் பார்த்த முதல் முகம் நீ...' என்ற பாடலைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அம்மா சென்டிமென்ட்டை வைத்து உருவாகியுள்ள இப்பாடல் யூடியூப் தளத்தில் 2 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துவருகிறது.‘வலிமை’ திரைப்படம் பொங்கலுக்குத் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ACTOR AJITHKUMAR ajith valimai
இதையும் படியுங்கள்
Subscribe