
இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் 'வலிமை' படத்தில் நடித்துள்ளார். இதில் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்துள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். 'வலிமை' படத்தின் பணிகள் அனைத்தும் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு தீவிரம் காட்டிவருகிறது. சமீபத்தில் வெளியான ‘வலிமை’ படத்தின் மேக்கிங் வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

வலிமை படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்த நிலையில், தற்போது படத்தின் ரிலீஸ் படக்குழு அறிவித்துள்ளது அதன்படி, வலிமை திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்திற்கு தணிக்கை குழு யு/ ஏ சான்று வழங்கியுள்ளது.