valimai movie postpone

Advertisment

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் 'வலிமை' படத்தில் நடித்துள்ளார். இதில் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்துள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 13 ஆம் தேதி வலிமை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில் வலிமை படத்தின்ரிலீஸ் ஒத்திவைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் குறைந்து வந்த கரோனாபரவல் தற்போது மீண்டும் வேகமெடுக்கத்தொடங்கியுள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்தவகையில்தமிழக அரசு திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமேஅனுமதி அளித்துள்ளது. இதனால்'வலிமை' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாகசினிமா வட்டாரத்தில்தெரிவித்துள்ளனர்.விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கரோனாபரவல் எதிரொலியால் 'ஆர்.ஆர்.ஆர்' மற்றும் 'ராதே ஷ்யாம்' படங்களின்ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.