ajith

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வலிமை'. போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு, யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். கடந்த ஆண்டுபூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் பணிகள் கரோனா நெருக்கடி நிலை காரணமாகத் தடைப்பட்டன. பின்னர் படப்பிடிப்பு நடத்துவதற்கு அரசின் அனுமதி கிடைத்ததை அடுத்து, படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

Advertisment

படத்தின் பூஜையின் போது வெளியான பெயர் அறிவிப்பைத் தவிர்த்து படம் குறித்த வேறெந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. படத்தின் அப்டேட் குறித்து சமூக வலைதளங்களில்ரசிகர்கள் கேள்வியெழுப்பும் ஒவ்வொரு முறையும் தயாரிப்புத் தரப்பு தொடர்ந்து மௌனம் காத்து வருகிறது.

Advertisment

இந்நிலையில், 'வலிமை படத்தின் புகைப்படம்' என்றபெயரில் ஒரு புகைப்படம்இன்று காலை இணையத்தில் வெளியானது. அப்படத்தை, 'வலிமை திருவிழா ஆரம்பம்' என்ற ஹேஷ்டேக்குடன் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். படம்குறித்து தொடர் ரகசியம் காத்துவந்த படக்குழு, இதனால் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் எந்தத் தரப்பில் இருந்து இப்புகைப்படம் வெளியானது என விசாரித்து வருவதாகவும்கூறப்படுகிறது.