Advertisment

அஜித் படத்திற்காக ஒன்றிணைந்த இந்திய சூப்பர் ஸ்டார்கள்

valimai movie hindi kannadam and telugu trailer released now

Advertisment

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் 'வலிமை' படத்தில் நடித்துள்ளார். இதில் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்துள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். அஜித் - எச். வினோத் - போனி கபூர் கூட்டணியில் 'நேர்கொண்ட பார்வை' படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் 'வலிமை' படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 'வலிமை' படத்தின் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிடமொழிகளில் பிப்ரவரி 24 ஆம் தேதிவெளியாகவுள்ளது.

ஏற்கனவே வெளியான வலிமை படத்தின் தமிழ்ட்ரைலர்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது மற்ற மொழிகளில் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இதனைதென்னிந்திய சூப்பர் ஸ்டார்களான மகேஷ் பாபு தெலுங்கிலும், அஜய் தேவ்கன் இந்தியிலும்,கிச்சா சுதீப் கன்னட மொழியிலும் வெளியிட்டுள்ளனர்.

ajay devgan kicha sudeep mahesh babu ajith kumar valimai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe