/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/karthikeya.jpg)
இயக்குநர்எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் 'வலிமை' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாகப் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருந்துவரும்இவர்,தற்போது ‘ராஜா விக்ரமர்க’படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து வெளியீட்டுக்குத்தயாராகவுள்ளது.
இந்நிலையில் நடிகர் கார்த்திகேயா லோகிதா என்பவரைத்திருமணம் செய்துள்ளார். இவர்கள் இருவரும் 10 வருடமாகக் காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்லோகிதாவைஅழைத்து வந்து வெளிப்படையாக ப்ரொபோஸ் செய்திருந்தார். இதனைத்தொடர்ந்து நேற்று ஹைதராபாத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் நடிகர் சிரஞ்சீவி உள்ளிட பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)