
இயக்குநர்எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் 'வலிமை' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருந்துவரும்இவர்,தற்போது ‘ராஜா விக்ரமர்க’படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராகவுள்ள நிலையில், 'ராஜா விக்ரமர்க' படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் படக்குழு இறங்கியுள்ளது.
அந்த வகையில்சமீபத்தில் 'ராஜா விக்ரமர்க'படத்தை விளம்பரப்படுத்தும் விழா நடைபெற்றது. அதில், நடிகர் கார்த்திகேயா மேடையில் தன்காதலி லோகிதாவுக்கு மண்டியிட்டு ப்ரொபோஸ் செய்தார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. கார்த்திகேயா, லோகிதா இருவருக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், வரும் நவம்பர் 21 ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக மேடையில் அறிவித்தார். இதையடுத்து காதல் ஜோடி இருவருக்கும் திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)