ajith

‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்குப் பிறகு எச். வினோத் - அஜித் - போனி கபூர் கூட்டணி ‘வலிமை’ படத்திற்காக மீண்டும் இணைந்தது. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடிக்க, வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பானது கரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டங்களாகத் தடைபட்டது. இருப்பினும், மிகுந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தி படப்பிடிப்பை படக்குழு நிறைவு செய்துள்ளது.

Advertisment

இந்த நிலையில், ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் வடிவில் நேற்று (11.07.2021) வெளியிடப்பட்டது. யூடியூப் தளத்தில் நான்கு மில்லியன் பார்வைகளைக் கடந்து ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ள ‘வலிமை’ மோஷன் போஸ்டர், ஆறு லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்களைப் பெற்றுள்ளது. இது இந்திய அளவில் ஒரு மோஷன் போஸ்டர் பெற்ற அதிகபட்ச லைக்ஸ்களாகும்.

Advertisment

இந்திய அளவில் அதிக லைக்ஸ்களைப் பெற்ற மோஷன் போஸ்டராக ‘விஸ்வாசம்’ படத்தின் மோஷன் போஸ்டர் இருந்த நிலையில், அச்சாதனையை ‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் முறியடித்துள்ளது.