Advertisment

"நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ"... மேக்கிங்கில் மிரட்டும் வலிமை !

valimai making video released

Advertisment

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் 'வலிமை' படத்தில் நடித்துள்ளார். இதில் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்துள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயாபடத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். 'வலிமை' படத்தின் பணிகள் அனைத்தும் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு தீவிரம் காட்டிவருகிறது. சமீபத்தில் வெளியான ‘வலிமை’ படத்தின்க்ளிம்ப்ஸ் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் வலிமை படத்தின் மேக்கிங் வீடியோவைபடக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதில் வலிமை படம் கடந்து வந்த பாதை, படப்பிடிப்பு தளத்தில் கீழே விழுந்த அஜித், உடனே எழுந்து ஷாட்டுக்கு ரெடியான அஜித் என அத்தனை காட்சிகளையும் படக்குழு பதிவு செய்துள்ளது. மேக்கிங்கில் மிரட்டும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

ACTOR AJITHKUMAR ajith valimai
இதையும் படியுங்கள்
Subscribe