Skip to main content

இன்று இரவு வெளியாகும் ‘வலிமை’ முதல் பாடல்?

Published on 02/08/2021 | Edited on 02/08/2021

 

ajith

 

'நேர்கொண்ட பார்வை’ படத்திற்குப் பிறகு எச். வினோத் - அஜித் - போனி கபூர் கூட்டணி ‘வலிமை’ படத்திற்காக மீண்டும் இணைந்தது. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஹூமா குரேஷி நடிக்க, வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பானது, கரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டங்களாகத் தடைபட்டது. இருப்பினும், மிகுந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்திய படக்குழு, ஒரு சண்டைக்காட்சியைத் தவிர்த்து எஞ்சிய காட்சிகளுக்கான படப்பிடிப்பை நிறைவுசெய்துள்ளது.

 

மோஷன் போஸ்டர் வடிவில் கடந்த மாதத்தின் மத்தியில் வெளியிடப்பட்ட ‘வலிமை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற நிலையில், ‘வலிமை’ படத்தின் முதல் பாடல் வெளியீடு குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘வலிமை’ படத்தின் முதல் பாடல் இன்று (02.08.2021) இரவு 10 மணிக்குப் பிறகு வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. படக்குழு தரப்பிலிருந்து இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில், திரைத்துறை வட்டாரத்தைச் சேர்ந்த பலரும் இத்தகவலைத் தங்களுடைய சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளதால், ‘வலிமை’ ஃபர்ஸ்ட் சிங்கிள் என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகிவருகிறது.  

 

 

சார்ந்த செய்திகள்